search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொட்ட ராஜேந்திரன்"

    கவிராஜ் இயக்கத்தில் ஆரி - சாஷ்வி பாலா நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala
    புரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம்  ராவுத்தர் அவர்களின் 'ராவுத்தர் மூவிஸ்'. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆரி நடிப்பில் உருவாகி வரும் `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது.

    இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இதில் ஆரி ஜோடியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். 



    இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு பணிகளையும், கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். 

    இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார். #EllamMelaIrukuruvanPaathuppan #Aari #ShaashviBala

    ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய் - தமன் குமார் - சுபிக்‌ஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் `நேத்ரா' படத்தின் விமர்சனம். #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika
    தமன் குமாரும், சுபிக்‌ஷாவும் காதலிக்கிறார்கள். இந்த நிலையில், சுபிக்‌ஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த திருமணத்தில் விருப்பமில்லாததால், கனடாவில் இருக்கும் தனது நண்பர் வினய்யிடம் உதவி கேட்கிறார் சுபிக்‌ஷா.

    இதையடுத்து தமன் குமார், சுபிக்‌ஷாவை கனடாவுக்கு வரவைக்கும் வினய், வேறுஒரு வேலையாக வெளிநாடு செல்கிறார். இந்த நிலையில், கனடா வரும் இவர்களுக்கு அந்த நாட்டு போலீசார் உதவுகிறார்கள். பின்னர், இமான் அண்ணாச்சி வேலை பார்க்கும் ஹோட்டலில் தமன் குமாருக்கு வேலை கிடைக்கிறது.



    இந்த நிலையில், தமன் குமார் காணாமல் போகிறார். இதுகுறித்து சுபிக்‌ஷா, போலீசில் புகார் தெரிவிக்கிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்க, தமன் குமார் என்ற ஒருவர் வரவேயில்லை என்றும், சுபிக்‌ஷா மட்டுமே வந்ததாகவும் அனைவரும் கூறுகின்றனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க தொடங்குகிறார் வெங்கடேஷ். இதற்கிடையே வினய் கனடா திரும்புகிறார்.

    கடைசியில், தமன் குமாரை மாயமானதன் பின்னணி என்ன? அவர் என்னவானார்? அவரை யார் கடத்தினார்கள்? சுபிக்‌ஷா - தமன் குமார் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    தமன் குமார் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தில் சுபிக்‌ஷா தனது திறமையை நிரூபித்திருக்கிறார். காதல், நட்பு, போராட்டம் என சுபிக்‌ஷாவை சுற்றியே கதை நகர்கிறது. கதையின் ஓட்டத்திற்கு வினய் முக்கிய காரணியாகிறார். வலுவான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துவிட்டு சென்றிருக்கிறார். 

    இமான் அண்ணாச்சி ஓரிரு இடங்களில் காமெடி செய்கிறார். ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்திரன் காமெடி ஓரளவுக்கு வேலை செய்கிறது. மற்றபடி வெங்கடேஷ், ரித்விகா, வின்சென்ட் அசோகன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.



    ஆள் தெரியாத ஒரு ஊரில் காதலனை இழந்து தவிக்கும் ஒரு பெண்ணின் கதையை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ். படம் பெரும்பாலும் கனடாவிலேயே உருவாகி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வேகமாக நகர, இரண்டாவது பாதியின் நீளம் அதிகமாக இருப்பது படத்தின் மீது தொய்வை ஏற்படுத்துகிறது. திரைக்கதையை கொஞ்சம் வலுப்படுத்தியிருக்கலாம்.

    என்.கணேஷ் குமாரின் படத்தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ஏ.ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவும் அருமை.

    மொத்தத்தில் `நேத்ரா' தெளிவில்லை. #Nethra #NethraReview #Vinay #ThamanKumar #Subhiksha #Riythvika #AVenkatesh 

    ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனம். #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஆட்டோ டிரைவரான சந்தானம் தனது மாமா மொட்ட ராஜேந்திரனுடன் வசித்து வருகிறார். தினமும் குடித்து விட்டு ரகளை செய்யும் இவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பகுதி மக்கள் இருவரையும் அடக்குவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அதற்கான முயற்சியில் இறங்குகின்றனர். மறுபுறத்தில் டாக்டராக இருக்கிறார் நாயகி ஷிர்தா சிவதாஸ். ஷிர்தாவிடம் யாராவது காதலை சொன்னால், அவரை பேய் அடித்துவிடுகிறது.

    இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் டி.எம்.கார்த்திக், சந்தானத்தின் தொல்லை தாங்க முடியாமல், சந்தானத்தை, ஷர்தாவுடன் கோத்துவிட திட்டமிடுகின்றனர். அதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. ஷிர்தாவை பார்த்தவுடன் சந்தானத்திற்கு அவர் மீது காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் தனது காதலை சொல்ல சந்தானத்தையும் பேய் அடித்துவிடுகிறது.

    கேரளாவில் மந்திரவாதியாக இருக்கும் ஷிர்தாவின் அப்பாவை பார்த்து பேசினால் தான் எல்லாம் சரியாகும் என்று தனது மாமா மொட்டை ராஜேந்திரனுடன் கேரளா செல்கிறார் சந்தானம்.



    அங்கு ஷிர்தாவின் தந்தையை பார்த்து தனது காதல் பற்றி பேசினாரா? சந்தானத்தின் காதலுக்கு ஷிர்தாவின் அப்பா பச்சைக் கொடி காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே தில்லுக்கு துட்டுவின் மீதிக்கதை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு சந்தானம் தனது வழக்கமான காமெடி மூலம் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கிறார். காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்திலும் ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஷிர்தா சிவதாசுக்கு தமிழில் முதல் படம் என்றாலும், அவர் தனது கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளிப்படுத்தியிருப்பது சிறப்பு.

    சந்தானத்தின் மாமாவாக வரும் மொட்ட ராஜேந்திரனின் கதாபாத்திரமும் சிரிக்க வைக்கிறது. குறிப்பாக இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி தான் படத்தின் ஹைலைட். இருப்பினும் ஒரு சில இடங்களில் ஏமாற்றத்தையும் தருகிறது. மாஸ்டர் சிவசங்கர், ஐயப்பா பைஜூ, டி.எம்.கார்த்திக், ராமர், தனசேகர் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.



    தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கும் ராம் பாலா ரசிர்களை ஓரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். பேயை கலாய்க்கும்படியாக வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக இரண்டாவது பாதி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். அனைவரையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

    ஷபீரின் பின்னணி இசை படத்திற்கு பலம், பாடல்களும் கேட்கும் ரகம் தான். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `தில்லுக்கு துட்டு 2' ஒர்க்அவுட்டு. #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முன்னோட்டம். #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas
    ஹாண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் சந்தானம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தில்லுக்கு துட்டு 2'.

    சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷிர்தா சிவதாஸ் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஊர்வசி, மொட்ட ராஜேந்திரன், மாஸ்டர் சிவசங்கர், மாரிமுத்து, விஜய் டிவி ராமர், விஜய் டிவி தனசேகர், ஜெயப்பிரகாஷ், பிபின், சி.எம்.கார்த்திக், பிரசாந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - ஷபீர், ஒளிப்பதிவு - திப்பாக்குமார் பதி, பாடல்கள் - அருண்பாரதி & கானா வினோத், படத்தொகுப்பு - மாதவன், கலை இயக்கம் - ஏ.ஆர்.மோகன், சண்டைப்பயிற்சியாளர் - ஹரி தினேஸ், நடனம் - சாண்டி, ஆடை வடிவமைப்பு - ஆர்.பிரவீன்ராஜ், இணை தயாரிப்பு - சி.ரமேஷ்குமார், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ், தயாரிப்பு - ஹாண்ட்மேட் பிலிம்ஸ், தயாரிப்பாளர் - என்.சந்தானம், எழுத்து, இயக்கம் - ராம்பாலா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சந்தானம் பேசியதாவது,

    ‘‘ பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், தில்லுக்கு துட்டு 2 படத்தில் மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு 2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.

    நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி. நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல. அந்த படங்களில் நான் நடித்து முடித்துவிட்டேன். ‘தில்லுக்கு துட்டு 2’ என் சொந்த படம் என்பதால், அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருகிறேன்.’’ இவ்வாறு சந்தானம் கூறினார். 

    படம் வருகிற பிப்ரவரி 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas

    ×